dance
Google
Web rajeshkuma2006.blogspot.com

Sunday, August 31, 2008

இந்தியன் என்று சொல்லடா. தலை குனிந்து நில்லடா.

இன்று காலை தினகரன் நாளிதழில் நான் படித்ததை அனைவரும் படிக்க தந்து இருக்கிறேன்.

நமது இந்தியா எதற்கு பஞ்சத்தை கொண்டு இருந்தாலும் திறமையான மனிதர்களுக்கு பஞ்சத்தை கொண்டு இருக்கவில்லை. ஆனால் அவர்களது திறமைகளை வெளிபடுத்துவதற்கு தான் வாய்புகள் இல்லை.

உங்களுக்காக இந்த செய்தி.

பரிசு வேண்டாம்
மாணவிகள் கண்ணீர்


கோவை, ஆக. 31: ‘பரிசு வேண்டாம்; ஷ¨ கொடுத்தால் போதும்‘ என்று கோவையில் நடந்த மராத்தான் போட்டியில், ஷ¨ இல்லாமல் கால்களில் ரத்தம் கசிய ஓடி, பரிசுகளை வென்ற அரசுப்பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.

கோவையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) சார்பில் மராத்தான் ஓட்டப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

18 வயதுக்கு குறைந்த மாணவிகள் பிரிவில் பங்கேற்ற புதுக்கோட்டை, முள்ளூர் அரசு பள்ளி மாணவிகள் சிலர் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். ஓட்டம் துவங்கி சில நிமிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த இந்த மாணவிகள், தங்கள் கால்களில் ஷ¨க்கள் அணியாமல், வெறும் காலில் ஓட்டப் போட்டியில் பங்கேற்றனர். இதனால், கால்களில் காயம் ஏற்பட்டது. ரத்தம் கசிந்தது.

முதல் 10 இடங்களில் கணிசமானவற்றை இந்த பள்ளி மாணவிகள் பிடித்திருந்தனர். 9ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி 2ம் இடத்தையும், 10ம் வகுப்பு கவிதா 4ம் இடத்தையும் பிடித்தனர். இந்த மாணவிகள், கால்களில் ஷ¨க்கள் அணிந்திருக்கவில்லை.

மாணவிகள் விஜயலட்சுமி, கவிதா ஆகியோர் கூறுகையில், ‘‘இந்த போட்டியில் பங்கேற்க பள்ளியில் இருந்து 12 பேர் கோவை வந்துள்ளோம். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். ஷ¨ மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இந்த ஓட்டத்தில் பங்கேற்ற எங்களில் பெரும்பாலானோருக்கு கால் பாதம் வெடித்து விட்டது. இந்த வலி ஒரு வாரம் இருக்கும். பல போட்டிகளில் பங்கேற்று விட்டதால் பழகி விட்டது. ஷ¨க்கள் இருந்தால் மேலும் சாதனைகள் புரிய வாய்ப்பாக இருக்கும். எங்கள் தேவை இப்போது பரிசுகளல்ல. கால்களைப் பாதுகாக்கும் ஷ¨க்கள் மட்டுமே’’ என்றனர்.

இரத்தம் வடிந்தது இவர்கள் காலில் மட்டும் அல்ல. ஒவ்வொரு உண்மையான இந்தியனின் இதயத்திலும்தான். அரசியல்வாதிகள் பேசுவதற்காக மட்டுமே உள்ளவர்கள். ஒரு சிபாரிசு கடிதத்திற்கு இரண்டு லட்சம் வரை லஞ்சம் வாங்குபவர்கள். இவர்களை நம்பினால் நமக்கு முடி கூட மிஞ்சாது.

நமது வசிப்பிடங்களுக்கு அருகிலும் இவர்களை போன்றவர்கள் இருக்கலாம். இதை படிக்கும் இரக்க குணம் உள்ள வசதி படைத்த இந்தியர்கள் இவர்களை போன்றோருக்கு உதவலாமே.

Monday, July 28, 2008

இலவசமாய் சாஃப்ட்வேர்கள் டவுன்லோட் செய்யலாம்


இன்றைய தலைப்பு போர்ட்டபிள் சாஃப்ட்வேர்.

பெயரை பார்த்தவுடனே பெரும்பாலானவர்க்கு புரிந்திருக்கும். இந்த சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று அதில் உள்ள Exe பைலை டபுள் கிளிக் செய்தாலே போதும். இயங்கத் தொடங்கி விடும்.

கையில் கிடைக்கும் சாஃப்ட்வேர்களை எல்லாம் இன்ஸ்டால் செய்து கொண்டேயிருந்தால் போகப் போக நமது கணிணி மெதுவாக இயங்க ஆரம்பித்துவிடும். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக போர்ட்டபிள் சாஃப்ட்வேர் உள்ளது. பெரும்பாலான போர்ட்டபிள் சாஃப்ட்வேர்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.Google-ல் Download Portable Software என்று கொடுத்தால் நிறைய தளங்கள் நமது பார்வைக்கு கிடைக்கின்றன.

என்னதான் போர்ட்டபிள் சாஃப்ட்வேர்கள் இந்த வகையில் பயனுள்ளதாக இருந்தாலும் அதில் முழுமையான சாஃப்ட்வேர்களில் சில வேலைகளை செய்ய முடியாது. உதாரணமாக Corel Draw Portable சாஃப்ட்வேரில் டிசைன் செய்தவைகளை Save செய்ய முடியாது. VLC Media Player Portable Software Open ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

இப்படி பிரச்சனைகள் இருந்தாலும் நிறைய பேர் Portable சாஃப்ட்வேர்களை பயன்படுத்ததான் செய்கின்றனர்.

உங்களுக்காக போர்ட்டபிள் சாஃப்ட்வேர்களை தரும் லிங்க்குகள் கீழே தரப்பட்டுள்ளன.

Portablefreeware
Portableapps
Softpedia.com/get/PORTABLE-SOFTWARE/
Softwareportables.blogspot.com
Downloadsoftwarez.blogspot.com